2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகள் அட்டகாசம்

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 12 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் கூர்கண்டம் கிராமத்திற்குள் சனிக்கிழமை  (11) இரவு உட்புகுந்த காட்டு யானைகள் ,பயிரினங்களையும் பாதுகாப்பு வேளிகளையும் துவம்சம் செய்துள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் போது, தென்னைமரங்கள், மரவெள்ளி மரங்கள் ,வாழை மரங்கள் வீட்டு பாதுகாப்பு வேளிகள் போன்றவற்றை காட்டு யானைகள்  துவம்சம் செய்து சேதமாக்கியுள்ளது.

இதனால் தாம் பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தினை எதிர் நோக்கியுள்ளதாகவும் அந்த மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

எனவே ,இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை  மேற் கொள்ள வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X