2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையால் அதிர்ச்சிக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர், செல்வநகர் கிராமத்துக்குள் இன்று (13) அதிகாலை புகுந்த காட்டு யானையொன்று, வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதோடு, அவ்வீட்டில் உறக்கத்திலிருந்த பெண், அதிர்ச்சிக்குள்ளான நிலையில், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 12.30 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, குறித்த வீட்டை உடைத்து, அங்கிருந்த நெல்லையும் அரிசியையும் எடுத்துச் சாப்பிட்டுள்ளது.

அத்துடன், வீட்டுக்கு வெளியே நெல் மூட்டைகளை எடுத்து வீசியுள்ள அதேவேளை, வீட்டின் வளாகத்தில் இருந்த வேளாண்மைகளையும் துவைத்து சேதப்படுத்திள்ளது.

யானை தும்பிக்கையால் வீட்டை உடைத்த போது, இதனை அவதானித்த அவ் வீட்டில் உறங்கிய பெண், பயத்தின் காரணமாக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளாகி மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அவருடன் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள், பாதுகாப்பாக அவரைத் தூக்கிச் சென்று, பக்கத்து வீட்டில் சேர்த்துள்ளனர்.

சிறுவர்களின் சமயோசனை செயற்பாட்டின் மூலமாக மூன்று உயிர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இக்கிராம மக்களின் நலனில் அக்கரை கொண்டு, உரிய அதிகாரிகள், யானை பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டுமென, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X