2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானையால் பதற்றத்தில் மக்கள்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் 98ஆம் கட்டை தாயிப் நகர் மற்றும் 97 சேனாவளி குளத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் இன்று (04) அதிகாலை காட்டு யானை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வயல் நிலங்கள் தற்போது சிறுபோக அறுவடைக்குத் தயாரான நிலையில் யானை நெற் செய்கையை அழித்து விட்டுச் செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பசளையின்றி பெரும் சிரமத்துக்கு மத்தியில் நெற் செய்கையை இம்முறை செய்து அறுவடைக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள போதிலும் நெல் செய்கையை யானை வயலுக்குள் புகுந்து துவம்சம் செய்து விட்டு செல்வதாக அப்பகுதிகள் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இக் காட்டு யானையில் இருந்து தங்களை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X