2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காட்டுப் பகுதியில் நாச செயல்கள்; தேடுதல் தீவிரம்

Princiya Dixci   / 2021 ஜூலை 13 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப்  பகுதியில் பெருமதியான காட்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன், மிருகங்களும் வேட்டையாடப்பட்டுள்ளன.

கந்தளாய், வான்எல, சைதாபிட்டி பகுதியில் இவ்வாறு இனந்தெரியாதோரால் அதிகளவான பல, வீர மற்றும் வின்னாங்கு மரங்கள் பாரியளவில் வெட்டி வீழ்த்தப்பட்டும், தீ வைக்கப்பட்டும் காணப்படுகின்றன.

அத்தோடு, வேட்டையாடிய மானின் எழும்புக்கூடு மற்றும் அதன் கொம்புகளும் அப்பகுதியில் காணப்படுகின்றன.

இந்தச் சட்டவிரோத செயல்களைச் செய்த நபர்களை தேடிவருவதாக கந்தளாய் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி பகுதி அதிகளவான தொல்பொருள் இடங்கள் காணப்படும் ஒரு பகுதியாகும் எனவும் இப்பகுதியில் காணப்படும் வனப் பாதுகாப்புக் கற்களும் வீசப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸாரும் கந்தளாய் வனப் பாதுப்பு பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .