Princiya Dixci / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் செயற்றிட்டத்தில், திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வுப் பணயத்தில், “இளையோர் பங்குபற்றுதலின் பிரதிபலிப்புக்கள்” என்ற தலைப்பிலான ஊடக சந்திப்பு, திருகோணமலை மாவட்ட விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, இளைஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ,போதைப்பொருள் பாவனையும் இளையோர் சமுதாயமும் , தமிழ் மக்களும் மொழி உரிமையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தேவைப்பாடு அதன் பிரயோக நிலையும் என்ற தலைப்புக்களிலான ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டது.
மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை மாதிரியாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago