Freelancer / 2024 ஜூலை 06 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த, நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணினுடையது என சந்தேகிக்கப்படும் சடலமும், அவரது கைப்பையும் நேற்று(5) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் சந்தேகத்திற்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரணவிசாரணை அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று(05) தோண்டியபோதே, பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த, நடேஸ்குமார் வினோதினி என்ற திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான, கணவரால் கைவிடப்பட்டிருந்த 25 வயதான பெண் காணாமல் போயிருந்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினரால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஜுலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பெண்ணின் காதலன் தற்போது தலைமறைவாகி உள்ளார். இவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. இதேவேளை இவரின் குடும்பத்தவர்களும் தலைமறைவாகி உள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போது சடலம் கண்டெடுக்கப்பட்ட கிணறு உள்ள காணி உரிமையாளர், கிணற்றில் சடலத்தை மறைக்க உதவிய கனரக வாகன சாரதி, குப்பைகளை கிணற்றில் இட்டு அதனை மூடியவர் ஆகிய மூவரையும் கைது செய்யுமாறு மூதூர் நீதிவான் உத்தரவிட்டு,வழக்கை இம்மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். R





17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025