2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

காணாமல் போன மீனவரை தேடும் பணி தொடர்கிறது

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை, வீரநகரில் இருந்து நேற்று முன்தினம் (16) கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கரை  திரும்பாததையடுத்து, அவரைத் தேடும் முயற்சியில் மீனவப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவென, வீரநகர் மீனவச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நாகேஸ்வரன் டிலக்சன் (31 வயது) எனும் மீனவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மீனவச் சங்கங்களின் 6 படகுகளைப் பயன்படுத்தி, நேற்று (17) தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும், அம்முயற்சி பயனளிக்காமையால் இன்று (18) தேடுதலுக்காக 18 படகுகள், சங்கங்களின் ஏற்பாட்டில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, வீரநகர் மீனவச் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாகக் கடற்படையினரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .