2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

காணாமல் போன மீனவர்கள் - உலங்குவானூர்தி மூலம் தேடுதல் தீவிரம்

Freelancer   / 2024 மே 24 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கீதபொன்கலன்

திருகோணமலை சல்லிக்கடற்கரையிலிருந்து இம்மாதம் 21ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற சல்லிப் பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிலுள்ளனர்.

குட்டிராசா சசிகுமார்(44), முருகையா சுஜாந்தன்(32) ஆகிய இரு மீனவர்களுமே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்களால் இவ்விடயம் பற்றி மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தில் 22ஆம் திகதியும்,23ஆம் திகதி துறைமுகப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, திருகோணமலை மாவட்ட ஈ.பி.டி.பி.கட்சியின் பொறுப்பாளர் த.புஸ்பராஜா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அமைச்சர் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து தேடுதல் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது காலநிலை சீரின்மையால் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் தேடுதலில் ஈடுபடுவதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கடற்பகுதி அதிக கொந்தளிப்பான நிலையில் உள்ளதால் தேடுதல் முயற்சிகள் சற்று தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X