2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

காணி ஆவணங்கள் இல்லை; விசாரணைகள் முன்னெடுப்பு

Editorial   / 2022 ஜனவரி 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக முறையான காணி ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் மற்றும் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கான காணி ஆவணத்தை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட காணி விசாரணைகள், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் விசாரணைகள், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரனின் தலைமையில், பிரதேச செயலக காணிப் பிரிவினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றன

நீண்ட காலமாக முறையான காணி ஆவணங்கள் இன்றி குடியிருப்போர் மற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் 1,618 பேர், அரசின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ், தமக்கான காணி ஆவணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் விண்ணப்பங்களை வழங்கி இருந்தனர்.

இம்மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் விசாரணைகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், காணி உத்தியோகத்தர்களான பூ.கோவிந்தசாமி, ந.நந்தகுமார், திருமதி லோஜினி கோகுலன், கிராம உத்தியோகத்தர் உ.உதயகுமார் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, இவ் ஆரம்ப கட்ட காணி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X