2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காணி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தால் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களின் காணிக் கிளையில்  பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களான காணி உத்தியோகத்தர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், வெளிக்களப் போதனாசிரியர்கள் ஆகியோருக்கு  வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச தெரிவித்தார்.

இவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள், பிரதேச செயலகங்களுக்குத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இடமாற்றமானது, 26.10.2017 தியதியன்று இடமாற்ற சபையின் தீர்மானத்துக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உத்தியோகத்தர்கள்  ஏதும்  மேன் முறையீடு செய்யவிரும்பினால் 2017.11.22 திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்யமுடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணக்காணி ஆணையாளர் புதிய கடமை நிலையத்தில் 2018.01.01 ஆம் திகதி முதல்  கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டு, தமக்கு அறிக்கையிடவேண்டுமெனவும் உத்தியோகத்தர்களை, காணி ஆணையாளர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X