Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், தீஷான் அஹமட், பொன்ஆனந்தம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, மூதூர் பிரதேச செயலகத்தின் முன்னால் நேற்று (10) கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை, மூதூரிலுள்ள சம்பூர், கங்குவேலி, படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக் கோரி, ஜனநாயக மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாகப் பொதுமக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சம்பூர், கங்குவேலி ,மல்லிகைத்தீவு, பெரியவெளி, பட்டித்திடல் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்குகொண்டனர்.
மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்குதலில் மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புகளை நிறுத்தி, துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டகாரர்கள் இங்கு கோரினர்.
அத்துடன், காணி உறுதி வழங்குவதற்கான காணிக் கச்சேரி 5 ஆண்டுகளாக நடத்தபட்ட போதும், உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு, இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், வனப் பரிபாலனத் திணைக்களம், தமது காணிகளுக்குள் எல்லைக்கற்களைப் போட்டு, தமது காணிகளில் விவசாயம் செய்யவும் தடைசெய்து வருவதாகவும் அதனை விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago