2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’காணி உறுதிப் பத்திரம் இரு வாரங்களுக்குள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியிலுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப்பத்திரங்கள், இரு வாரங்களுக்குள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலகவுடனான சந்திப்பின் போதே, காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகளைத் துரிதமாக ஏற்பாடு செய்யுமாறு, காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கலந்துரையாடியதன் பின்னரே, இவ்வாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கிண்ணியா, பைசல் நகரில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கான காணிக் கச்சேரி அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அவர்களுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்க முடியாமையிட்டு, இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்தே, இரு வாரங்களுக்குள் உரியவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கவுள்ளதென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X