2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காணி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2023 நவம்பர் 10 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை- பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொது மக்கள் சிலர் தங்களுக்கு குடியிருப்பு மற்றும் சுயதொழில் முயற்சிக்கு அரச காணியை வழங்குமாறு கோரி   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து பல காணிக் கச்சேரிகளுக்குச் சென்றும் நீண்டகாலமாக அரச காணிக்காக தாம் காத்திருப்பதாகவும்  இதுவரை தமக்கு காணி வழங்கப்படவில்லை எனவும் தமக்கு காணியை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர் 

அத்துடன் ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தொழில் முயற்சிக்காக 160 காணித்துண்டுகள் இப்பகுதியில் 2021ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றில் 15க்கும் குறைவான காணிகள் மாத்திரமே தொழில் முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் 

ஏனைய காணித்துண்டுகள் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் அவற்றை சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற அரச காணி இல்லாத சரியான நபர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .