Janu / 2025 நவம்பர் 20 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை , தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(20) காலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை, 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திருகோணமலை - கந்தளாய் தனியார் பஸ் சேவையில் நடத்துனராக ஈடுபடும் நிலையில் கண்டி - திருகோணமலை வீதி பாலம்போட்டாறு பகுதியில் உள்ள கோவில் உண்டியலில்
காணிக்கை போட்டு விட்டு மீண்டும் ஓடி சென்று பஸ்ஸில் ஏறிய போது தவறி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஏ.எச் ஹஸ்பர்
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025