Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொது வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக ஏழுமாதக் கர்ப்பிணியும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர் எனவும், நால்வர் அவசர (ETU), தீவிர (ICU) சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண், திருகோணமலை, நித்தியபுரி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த எஸ். அகிலவாணி 31 வயதுடையவர் எனவும், மற்றைய பெண் நிலாவெளி, இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சுகவீனமுற்று இருக்கின்றவர்கள் அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சைப் பெறுமாறும், திருகோணமலை பொது வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
உயிரிழந்த பெண்கள் இருவருக்கும் எச் 1 என் 1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்றாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக, வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் இரத்தப் பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ பரிசோதனை எனபவற்றுக்காக, கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவென, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரொட்ரிகோ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
4 hours ago