Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மே 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வட்டவன் பகுதியில் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் .
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன்,மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில், குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் நிதர்சன் ஆதித்யா என்ற 6 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் சகோதரனான, 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
எனினும் கணவன் மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது .
உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தீஷான் அஹமட்,எஸ்.கீதபொன்கலன்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago