Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 31 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக்
மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறும் காலம் போய், ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறும் காலம் வந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “தங்களை புலி குட்டிகளாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று மக்கள் முன் பூனைக் குட்டிகளாக மாறிவிட்டது. சீனி ஊழலை பற்றிப் பேசி முடிவத்துக்குள் கலப்பட தேங்காய் எண்ணெயுடன் வந்துவிட்டனர்.
“இன்று உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் கடன்பட்டே மக்கள் இரண்டு வேளையாவது உண்கின்றனர். அவ்வாறு கடன்பட்டு உண்ணும் மக்களுக்கு விஷம் கலந்த உணவையே இந்த அரசாங்கம் வழங்குகிறது. இந்த விஷ உணவுகளை ஜனாதிபதி உண்பதில்லை. அதனால் இதன் தாக்கம் அவருக்கு விளங்காது.
“காடழிப்பு, சீனி மோசடி, உயிர்த்த ஞயிறு தாக்குதல் அறிக்கை , தேங்காய் எண்ணெய் என இந்த அரசாங்கம் மக்களிடம் இருந்த செல்வாக்கை இழந்துவிட்டது.
“இத்தகைய சூழலில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும். அதனால்தான் இதை மறைக்க முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசாங்கம் முயல்கின்றது.
“அசாத் சாலி கைது செய்யப்பட்டமை அவர்கள் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காததால், தற்போது மீண்டும் மாடறுப்புத் தடையை கையில் எடுத்திருப்பதாக அறியக் கிடைக்கிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
32 minute ago