2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்களுக்கு துரித நட்டஈடு வழங்குமாறு பணிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கால்நடைகளின் இறப்புகள் காரணமாக, அண்மைக்காலமாகப் பாரிய நட்டத்தை எதிர்கொண்டு வரும் திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, துரித நட்டஈடு வழங்குமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய் உள்ளிட்ட பல பிரதேசங்களில், ஒருவித நோய் காரணமாக கால்நடைகள் இறந்துள்ளனவென, மாகாண கால்நடைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனவே, கால்நடை வளர்ப்பாளர்களின் நலன்கருதி, நட்டஈட்டுத் தொகைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வருமாறும், இதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக கொண்டு செயற்படுமாறும், அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X