Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 நவம்பர் 24 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் கடல் வழிப்பாதைப் பயணத்தில் 06 உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று (24) காலை 07 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை வழி மறித்து, பொதுமக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பாடசாலைக்குச் செல்வதற்காக காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக தற்காலிகமாக நேற்றையதினம் இந்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
எனினும், இந்த பஸ் சேவையை 06 உயிர்கள் போனதன் பிறகா போட வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே எனக் கோஷமிட்டு பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, பஸ் நகர முடியாதவாறு பஸ்ஸிக்கு முன்னல் கற்களை இட்டு, மக்கள் தடைப்படுத்தினர்.
இதனால், காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்.
அங்கியிருந்து அவர்கள் வீடு சென்றனர். சிலர் வேறு மார்க்கத்தினூடாக பாடசாலை சென்றனர்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் வருகை தந்தனர்.
எதிர்ப்பாளர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, எதிர்ப்புக் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago