2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு உதவி

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

சுகாதார அமைச்சின் ஊடாகப் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள், கிண்ணியா  தள வைத்தியசாலைக்கு,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக்கினால்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, கிண்ணியா தள வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹீர் தலைமையில் நேற்று (13) நடைபெற்றன.

கிண்ணியா தள வைத்தியசாலை அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த உபகாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .

இந்த இலத்திரனியல் திரையில் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச விகிதம்,  ஈசிஜி போன்ற பல்வேறு விடயங்களை ஒரே தடவையில் பார்க்கக்கூடிய வசதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மொத்த பெறுமதி 4.5 மில்லியன் ரூபாய் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X