2025 மே 01, வியாழக்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க கோரிக்கை

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ் 

திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் அல்லது மத்திய அரசுக்கு விடிவிக்க நடவடிக்கை எடுங்கள் என கிண்ணியா சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கை கடிதத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரிடம்  இன்று (16) அவர்கள் கையளித்தனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை சேவை பெறும் கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளப்பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கிண்ணியா உலமா சபை, சூறா சபை,ப ள்ளிவாசல்கள் சம்மேளனம், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து தெளிவுபடுத்தினர்.

இதன்போது, கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள விசேட நிபுணர் வைத்தியர் பிரச்சினை, காணி கட்டடப் பிரச்சினை, பிரசவ காலத்தில் இங்கு வரும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இவற்றை தீர்க்க முடியாதவிடத்து வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிவில் சமூகத்தினர், கிழக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .