Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமது முஸ்தபா முஹம்மது நிவாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக தவிசாளர் பதவி வரிதாக்கப்பட்ட நிலையில் இருந்த கிண்ணியா நகர சபைக்கான புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக சபை, இன்று( 20) கூடிய போதே, இவர் தெரிவு செய்யப்பட்டார்.
13 பேர் கொண்ட இந்தச் சபையில், இன்றைய தலைவர் தெரிவின் போது, 13 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். இதில் புதிய தவிசாளருக்கு 6 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட அய்யூப் சப்ரின் 3 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஓர் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தில் இருந்த கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த டிசெம்பர் மாதம் இருமுறை சமர்பிக்கப்பட்ட போதும், இரு முறையும் தோற்கடிக்கப்பட்டது.
இதன் காரணமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப, புதிய தவிசாளருக்கான தெரிவு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago
1 hours ago