2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் 17 பேர் மீட்பு: சிலரை தேடும் சுழியோடிகள்

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.

காணாமற்போன ஏனையோரை மீட்டெடுக்கும் பணிகளில்,   கடற்படையின் சிறப்புப் படயணி, உடனடி செயல்பாட்டுப் படையணி, கடற் படையணி உள்ளிட்ட சில சிறப்பு அணிகளும்,  சுழியோடிகளைச் சேர்ந்த எட்டு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என   கடற்படை ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X