2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியாவில் கால்நடைகள் இறப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் கால்நடைகள் நோயால்இறந்து வருகின்றனவென, இப்பிரதேச கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, கற்குழி, சூரங்கள், செம்பி மோட்டை, கல்லறப்பு, மணியரசங்குளம், கண்டலடி ஊற்று, வட்டமடு போன்ற பிரதேசங்களிலேயே கால்நடைகள் திடீரென நோய்வாய்ப்பட்டு தற்போது இறந்து வருகின்றன.

இதனால் கால்நடைகள் வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது பற்றி கிண்ணியா பிரதேச கால்நடை வைத்தியர் டொக்டர் எம்.எஸ்.எம். பைஸர் கருத்துத் தெரிவிக்கையில், கிண்ணியா பிரதேசத்தில் கால் நடைகள் திடீர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தாங்கள் உரிய இடங்களுக்குச் சென்று பிரேத பரிசோதனைகளைச் செய்து, குழிகளை வெட்டி, அவற்றைப் புதைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருப்பதாகவும், இக்கால்நடைகளுக்கு சரியான மேய்ச்சல் தரைகள் இன்மையால் அதறகான உணவுகள் கிடைக்காமையே, இதற்கான பிரதான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த காலத்தில் தோப்பூர் பிரதேசத்திலும் பெரும்பாலான கால்நடைகள் இறந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X