2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கிண்ணியாவில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மகமார் கிராமம்

Princiya Dixci   / 2021 மார்ச் 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக மகமார் கிராமத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டதை அடுத்து இவ்வாறு அடக்கம் செய்வதற்கான இடங்கள் நாடளாவிய ரீதியில் முன்மொழியப்பட்டு வரும் நிலையில், கிண்ணியாவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மகமார் கிராம சேவகர் பிரிவின் மையவாடியும் அடக்கம் செய்வதற்கான இடமாக முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று (07) பார்வையிட்டுள்ளதுடன், இது தொடர்பிலான அறிக்கையை வழங்கவுள்ளதாகவும் சுற்றறிக்கைக்கு அமைவாக இவ்விடம் அமையும் போது, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இது அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். ஹனி தெரிவித்தார். 

மேற்படி விஜயத்தில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் றிஸ்வி, கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார், பிராந்திய சுற்றுச் சூழல் அதிகாரிகளும் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X