Princiya Dixci / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரைத்தீவு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 03 உழவு இயந்திர சாரதிகள் இன்று (24) காலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது 3 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, கிண்ணியா உப்பாறு பகுதியில் மாட்டு வண்டியில் ஒன்றில சட்டவிரோதமாக மரக் குற்றிகளை ஏற்றி வந்த ஒருவரையும் இன்று (24) கைது செய்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மாட்டு வண்டியும் மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேகநபர்கள் நால்வரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிண்ணியா பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றும் (23) நேற்று முன்தினம் (22) ஆகிய இரு தினங்களில் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகன சாரதிகள் 12 பேரும், உழவு இயந்திர சாரதிகள் 06 நபர்களும் கைது செய்ப்பட்டதாகவும் இவர்களுடைய 12 டிப்பர் வாகனங்களும், 06 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026