2024 மே 18, சனிக்கிழமை

கிழக்கில் 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில், முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்  வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று (23) நடைபெற்றது. 

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர் செந்தில்,  “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போக்குவரத்து கட்டணங்கள் மிக உயர்வாக உள்ளன. இதனால் நியமனம்  வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் நலன்கருதி இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள  பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்குமானால் அங்கு கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

“நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எதிர்வரும்  ஓராண்டில் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” என்றார். 

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .