Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்தில், பொதுமக்களின் நலன்கருதி தகவல் மையமொன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும் ஆளுநர் அலுவலகமும், ஊடகப்பிரிவும் இணைந்து, இத்தகவல் மையத்தை உருவாக்கியுள்ளதாகவும் இத்தகவல் மையத்தின் பிரதானியாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக செயலாளர் ஏ.எம்.ஹஸன் மற்றும் திட்டமிடல் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தியும் செயற்படவுள்ளார்களென்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகவல் மையத்தில், கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அமைச்சுகளும், திணைக்களங்களும் இணைந்து பொதுமக்களின் நலன்களில் அக்கறைக்கொண்டு அனைத்துத் தகவல்களுக்கும் பதில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களை நியமிக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago