2025 மே 12, திங்கட்கிழமை

கிழக்கு பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசு செலுத்தவும்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தால் செலுத்தப்பட்டு வந்த நீர்க் கட்டணங்களை இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபாய் 1,200 வழங்கப்படுகிறது. வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது.

எனினும், கிழக்கு மாகாண பாடசாலைகள் கஷ்டத்தை எதிர்கொள்வதால் இந்தக் கட்டணங்களை அரசாங்கங்கம் முழுமையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ்களுக்கு QR முறையை ஊடாக 50 லீட்டர் பெட்ரோல் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் அதேபோன்று ஓட்டோகளுக்கும் 5 லீட்டர் பெட்ரோல் போதாது உள்ளமையால் அம்பியூலன்ஸ் மற்றும் ஓட்டோகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X