Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண கல்விச் செயற்பாட்டை மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் உறுப்பினர்களாக ஏ.சி. முஸ்ஸல் (கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர்), ஆர்.சுதர்ஷன் (கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வியமைச்சு), யு.கே.செனிவிரட்ண (கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வியமைச்சு), ஏ.ஜி.முகம்மத் பஸால் (கிழக்கு மாகாண உதவிச் செயலாளர் -கல்வியமைச்சு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்தம் பல இலட்சம் ரூபாய் செலவு செய்கின்ற போதிலும் கிழக்கு மாகாண கல்வி அடைவு மட்டத்தில் பின் தங்கியுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எம்.எல்.சி பெர்ணான்டோவினால் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .