2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் உதவிச் செயலாளர் நியமனம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிழக்கு மாகாண சபையின்  உதவிச் செயலாளராக கந்தளாயைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.பஸால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க வழங்கியுள்ளார்.

இவர், கிழக்கு மாகாண சபையில் நேற்று (22)  கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் இலங்கை நிர்வாக சேவை தரம் முன்று போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவு செயப்பட்டு, நிர்வாக சேவை அதிகாரியானார். அதன் பின்னர், கொழும்பில் ஒரு வருட பயிற்சியைப் பூர்த்தி செய்த பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .