2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தாதியர் நியமனம்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாண சபைக்கு சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட உயிரியல் பொறியியலாளர்கள் மற்றும் தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (06) நடைபெற்றது.

 25 தாதியர்கள்  மற்றும் உயிரியல் பொறியாளர்கள் இருவர், ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வில் ஆளுநர் உரையாற்றுகையில், “நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்ய அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.இலவசக் கல்வியினால் வழங்கப்படும் இந்த நியமனத்தை ஒரு வேலையாக மட்டும் கருதக் கூடாது” என்றார்.

மாகாண பிரதம செயலாளர் துசித பீ.வணிகசிங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரட்ணம், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X