Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்தில் அதிசொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளை, மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் சுற்றுலாத்துறையினரின் வருகையை அதிகரிக்கும் விதத்திலும், திருகோணமலையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கும் மட்டக்களப்பிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம்,கொழும்பு மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அதி சொகுசு பஸ் சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கிழக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களைவிடவும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், மீன் பிடி என அனைத்துத் துறைகளிலும் கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்து வருவதையே, நான் எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தின் சகல வளர்ச்சிக்கும் தங்களுடைய ஒத்துழைப்பு தேவையெனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago