2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத்தில், சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்த்துள்ளதாவது, நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. எனினும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பான விபரம் கல்வி அமைச்சில் இல்லாமையினால் கிழக்கு மாகாணத்துக்கான விண்ணப்பம் கோரப்படவில்லை.

எனவே, உடனடியாக கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பான விபரத்தை கல்வி அமைச்சுக்கு அறிவிக்கும்படி, கிழக்குமாகான கல்வி திணைக்களத்திடம் கேட்டிருந்தேன், அதன்படி கிழக்கு மாகாண பாடசாலைகளில் போதியளவு சமய ஆசிரியர்கள் காணப்படுவதாகவும் இதுவரை சமய ஆசிரியர்களுக்கான எந்த வெற்றிடமும் பாடசாலைகளில் இல்லையென கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆகவே, எதிர்காலத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் ஏற்படுமிடத்து கிழக்கு மாகாணத்திலும் சமய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X