Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் விலை மதிப்புத் திணைக்களமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போதே, ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை பிரதான பஸ் தரிப்பிடத்தில், நகர சபைக்குட்பட்ட கடைகளின் வாடகைப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பணத்தொகையைக் குறைத்து தருமாறு, இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் நகர சபைக்குட்பட்ட 23 கடைகள் காணப்படுகின்றன. அக்கடைகளுக்கு, மாதாந்த வாடகை அதிகமாகப் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த கடைகளுக்கு, பிரதேச சபையால் மாதாந்த வாடகை 26,000 ரூபாய் விலை மதிக்கப்பட்டிருந்த நிலையில், டென்டர் மூலமாக அதிக விலைக்கு 09 கடைகள் பெற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மொத்தமாகக் காணப்படுகின்ற 23 கடைகளுக்கும் புதிதாக விலை மதிப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்ககுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபே குணவர்தனவுக்கு உத்தரவிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சியானி விஜேவிக்ரம, அம்பாறை மாவட்டச் செயலாளர் துசித பீ வணிகசிங்க, கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago