2026 மார்ச் 18, புதன்கிழமை

கிழக்குப் பிராந்தியத்துக்கு புதிய தளபதி நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

22ஆவது படைப்பிரிவின் தலைமைத் தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜயசேகர, இலங்கை இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதனையொட்டி, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவை, மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (21) மேஜர் சந்தித்தார்.

இதன்போது, 22ஆவது படைப்பிரிவின் தலைமைத்தளபதியாக இருந்து திருகோணமலை மாவட்டத்துக்கு ஆற்றிய சேவைக்காக மாவட்ட செயலாளரால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், 22ஆவது படைப்பிரிவின் தலைமைத் தளபதியாகப் புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.என்.எம் வீரசிங்க, திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X