2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?

Editorial   / 2022 ஜனவரி 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன், எப்.முபாரக் 

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப்பகுதியில் இருந்து 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட ஜமீல் மிஸ்பரின் எனும் இளைஞனின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் பொலிஸாருக்கு எதிராக ஊடகங்கள் வழியாக இளைஞனின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

05.01.2022 அன்று குச்சவெளிப் பொலிஸாரால் பஸ்ஸை இடைமறித்து மேற்படி இளைஞன் கைது செய்ய முற்பட்ட போது, அவர் தப்பித்து காட்டுப் பகுதிக்குள் ஓடியதாகவும் அவரை பொலிஸார் கலைத்துச் சென்றதாகவும் மறுநாளே இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களால் பொலிஸாருக்கு எதிராக பரவாலான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலை அதிகாரிகள் இளைஞனின் உறவினர்களை அவர்களது இல்லத்தில் வைத்துச் சந்தித்துள்ளதுடன், அவர்களின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல் வசந்தராஜாவை தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய காரியாலயம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .