2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

குடைசாய்ந்து லொறி விபத்து

Editorial   / 2019 பெப்ரவரி 02 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி 10ம் கட்டைப் பகுதியில் இன்று (02)  அதிகாலை லொறியொன்று விபத்துக்குள்ளானது.

ஹொரவ்பொத்தான பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளானது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்காத்தாலேயே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் சேதம் லொறிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் லொறி உரிமையாளர்கள் டெலிகொம் நிறுவனத்துக்கு அறிவிக்காமல்  லாரியை கடத்திச் செல்ல முற்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் விபத்து தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளிடம் வினவிய போது விபத்து தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதியப்படவில்லையெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X