2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குரங்கபாஞ்சான் சென்ற பிக்குவால் பதற்றம்

Editorial   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் சலாம் யாசிம்

திருகோணமலை- கிண்ணியா குரங்குபாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பௌத்த பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் செவ்வாய்க்கிழமை(03) ஆம் திகதியும் நான்காம் திகதியும் குரங்கு பாஞ்சான் முகாமுக்குள் வருகை தந்து செல்வதாக  கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்திவான் பொலிஸ்  நிலையத்திற்கும், கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில்  முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமுக்குள் குறித்த பௌத்த மதகுரு உட்பட குழுவினர் சென்று வருவதினால் ஏதும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

குறித்த  கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள்  பௌத்த சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது புதையல் தோண்டுவதற்கு ஏதாவது உட்படுகின்றார்களா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் 

கிண்ணியா பிரதேச மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இவர்களின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்களும், நகர சபை உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X