A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் (18) இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இரு சிறுவர்களும் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (13வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த
அலிப்தீன் அஸ்கார் (13வயது) எனவும் தெரியவருகின்றது.
நோன்பு நோற்றுக் கொண்டு, சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள துடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025