எப். முபாரக் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில், ஐவரை, எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (27) உத்தரவிட்டார்.
திருகோணமலை, கந்தளாய் நகர் பகுதியைச் சேர்ந்த 20, 21, 22 வயதுடைய ஐவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இரு குழுக்களாக, திருகோணமலை பிரதேசத்தில் செயற்பட்டு வந்துள்ளதோடு, காதல் பிரச்சினைகள்தான் மோதலுக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு குழுவில் உள்ள ஒருவரை மூவர் தாக்கியுள்ளனர். பின்பு தாக்கப்பட்டவர், தனது குழுவை அழைத்துக்கொண்டு, மற்ற குழுவைத் தாக்கியுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தொடர்பாக, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, மேற்படி ஐவரையும் நேற்று (26) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago