Editorial / 2017 நவம்பர் 11 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரளக் கஞ்சா வைத்திருந்த இருவர், திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (11) காலை கைதுசெய்யப்பட்டு, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
24 வயது இளம் குடும்பஸ்தர்கள் இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா, பைஷல் நகர் தி- அல்- இர்பான் வித்தியாலய வீதியில் 5 கிராம் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, கிண்ணியா, நடுத்தீவு ஆயூர் வேத வைத்தியசாலை வீதியில் வைத்து 10 கிராம் கேரளா கஞ்சாவுடன் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் கேரளா கஞ்சாவையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago