அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 22 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் கேரளக் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி இருவரையும் நேற்று முன்தினம் (21) கைதுசெய்துள்ளதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கணவனும் 46 வயதுடைய அவரது மனைவியுமேன, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதீப் குமாரவின் பணிப்புரைக்கு அமைவாக, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து மூன்று கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago