Princiya Dixci / 2021 மார்ச் 25 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் 42 வயதுடைய பெண்ணொருவரை, மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (24) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2,200 மில்லி கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண், வீட்டில் கேரளா கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக மூதூர் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அவ்வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண், மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago