Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பீச் ஹோட்டலுக்கு முன்னால் வைத்து 13 கிராம் கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (09) இரவு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ விஜேசிங்க தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனையிட்ட போது, திருகோணமலை, லிங்க நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞனே கைதுசெய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்டவர், கேரளாக் கஞ்சாவுடன், கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரெனவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago