2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கைகலப்பு: அறுவருக்கு மறியல்

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பம் தொடர்பில், ஆறு பேரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க, இன்று (26) உத்தரவிட்டார்.

புல்மோட்டை, அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த 28, 29, 26, 33, 19 மற்றும் 24 வயதுடைய ஆறு பேரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து செயற்பட்டு வந்துள்ளனர். இதன்போது, ஒரு குழுவில் உள்ள நபரின் மனைவி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் மற்றொரு குழுவில் உள்ளோர் பதிவேற்றியதன் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கமே, கைகலப்பு தாக்குதலாக மாறியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X