Janu / 2024 ஜூலை 18 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் பணமாக இலஞ்சம் வாங்கும் போது இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி திங்கட்கிழமை (15) அன்று கடமை நேரத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10, 000 ரூபாய் கேட்டுள்ளார் . அப்போது மோட்டார் சைக்கிளில் சாரதி உடனடியாக 5, 000 ரூபாவை கொடுத்துள்ளார் . மீதி 5,000 ரூபாவை புதன்கிழமை (17) அன்று மாலை 7.20 மணியளவில் குறித்த அதிகாரியிடம் கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .
பின்னர் அவர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .