Princiya Dixci / 2021 ஜூன் 21 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் வயல் பகுதியில் நேற்று (20) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர், கைக்குண்டை கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளதையடுத்து, அவ்விடத்துச் சென்ற பொலிஸாரால் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கைக்குண்டு, கடந்த யுத்த காலத்தின் போது பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு யாருக்காவது சொந்தமானதா என்பது பற்றிய விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
02 Feb 2026
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Feb 2026
02 Feb 2026
02 Feb 2026