2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கைக்குண்டு விவகாரம்: பிக்குவுக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியில் வீடொன்றுக்கு, கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பிரதான பௌத்த பிக்குவை (28 வயது), எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (13)  உத்தரவிட்டர்.

 

2016 பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இரவு, திருகோணமலை - 4ஆம் கட்டை ஸ்ரீ வஜிரா ராமய விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், விகாரைக்குள் மறைந்திருந்த இருவரைக் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, சம்பவத்துக்குப் பிரதான பௌத்த பிக்கு காரணமெனக் இணங்காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை, கைக்குண்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பௌத்த பிக்கு, சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தலைமறைவாகியிருந்த நிலையில், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று சரணமடைந்தார்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிக்கு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எம்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X