2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டுகளுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவில், பரக்கும்புற பகுதியில் 03 கைக்குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர்,  தம்பலகாமம் பொலிஸாரால் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், தம்பலகாமம் பரக்கும்புற பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலகரட்னம் எனும் குடும்பஸ்தர் ஆவார்.

தம்பலகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அவருடைய வீட்டைச் சோதனையிட்ட போது மறைத்து வைத்திருந்த நிலையில் இக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தம்பலகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X